ஜெயிலர் 2 அலையால் ஒயிட் வாஷ் ஆன பத்தா!.. ஒரே மாசத்துல ஓடிடியில வந்துடுச்சே!..
நடிகர் விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் வரும் அக்டோபர் 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படத்தைப் பார்க்கலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், சாய் பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அட்லீ தயாரித்துள்ள இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
பத்தா என்ற ரவுடியின் வாழ்க்கையில் ஒரு சிறுவனால் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அந்தச் சிறுவன் அவரைப் பள்ளிக் கழிப்பறைக்குள் தவறுதலாகப் பூட்டிவிடுகிறான். அதன்பிறகு இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான கதை.
அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஓடிடிக்கு வருகிறது. ஓடிடியில் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
