அந்த இயக்குனருடன் கூட்டணி!.. அடுத்த தேசிய விருதுக்கு ரெடியான விஜய் சேதுபதி!..
கோலிவுட்டிலுள்ள முக்கிய நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
துவக்கம் முதலே ஹீரோயிசம் பண்ணாமல், பன்ச் வசனம் பேசாமல், பத்து பேரை அடிக்காமல் சாதாரண கதைகளை தேர்ந்தெடுத்து அதில் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
கதாபாத்திரம் பிடித்திருந்தால் அது எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொள்ளும் நடிகர்தான் விஜய் சேதுபதி. ஹீரோவின் நண்பன், கெஸ்ட் ரோல், ஹீரோ, வில்லன் என பல வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மாஸ்டர், விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில்தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்கவிருக்கிறாராம். தியாகராஜன் குமாரராஜா இதுவரை ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களும் அவரை முக்கியமான இயக்குனராக மாற்றி இருக்கிறது.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இவர் இயக்கிய போதே பேசப்பட்டார் அதன்பின் 9 வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார். இந்த படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான் இந்த கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடித்தால் கண்டிப்பாக விஜய் சேதுபதி இன்னொரு தேசிய விருதை வாங்குவார் என ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.
