Connect with us
tvk vijay

Cinema News

வாய் திறக்க கூடாது.. சைலன்ட் மோடுக்கு தள்ளப்பட்ட விஜய்.. அடி ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் விஜய். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் விஜய் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியுடன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டில் விக்கிரவாண்டியில் தனது அதிகாரப் போல அரசியல் வருகையை பகிரங்கமாக அறிவித்தார். இதில் பல விமர்சனங்கள் விஜய் மீது எழுந்தது. விஜய் கட்சி கொள்கை கோட்பாடு தான் என்ன? அவருடைய நிலைப்பாடு தான் என்ன? அவருடைய அரசியல் எதிரிகள் யார் அவர்களின் பெயரை சொல்வதற்கு இவ்வளவு பயமா? என பல விமர்சனங்கள் விஜய் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்டது.

இதனை அடுத்து விஜய் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார். அதில் தன்னுடைய அரசியல் எதிரிகளின் பெயர்களை வெளிப்படையாக பேசினார். அதுமட்டுமல்லாமல் விஜய் எல்லாரையும் கலாய்த்து தள்ளிவிட்டார். இந்த முறை விஜயின் பேச்சு அரசியல் எதிரிகளிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் தொடர்ந்து அரசியல் எதிரிகளால் தாக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக நடிகை திரிஷாவையும் விஜய்யும் வைத்து இஷ்டத்துக்கு கேப்ஷசன் போட்டு விஜய்க்கு அடிமேல் அடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் இனிமேல் கட்சி சார்ந்த பொது இடங்களில் வாய் திறந்து பேசக்கூடாது என்று அவருக்கு தடை போடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியிலிருந்து ஆரம்பிக்க உள்ளார் விஜய். அதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பேசுவதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரம் செய்யும் இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அனுமதி தரவில்லை என காவல்துறையிடம் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாயை மூடி கொண்டிருந்தால் ஓட்டு கேட்ட மாதிரி தான். ரசிகர்களும் இதுக்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

More in Cinema News

To Top