Categories: Cinema News latest news

நீங்க எதுனாலும் பேசுங்க..கவலையில்லை!.. விஜய் ஆசைப்பட்டது இதுதான்.. ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வருகிற பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்துக் கொண்டிருக்கிறது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வாரிசு.

Vijay (1)

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். படத்திற்கு இசை தமன். நேற்று மாலை வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி சூடுபிடித்திருக்கிறது. டிரெய்லரை பார்க்க ஆங்காங்கே ரசிகர்கள் உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஒரு தலைவனை கொண்டாடுவது போல கொண்டாடினர்.

இதையும் படிங்க : குட்டிக்கதை..பன்ச் வசனம்.. சூப்பர்ஸ்டாராக மாற ரஜினியை ஃபாலோ பண்ணும் நடிகர் விஜய்…

இந்த நிலையில் விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொல்வது சம்பந்தமான செய்திதான் இப்போது பிரபலமாகி வருகிறது. ஆனால் விஜய்க்கு இந்த பட்டத்தை கொடுப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 40 ஆண்டுகாலமாக ஒரு நடிகர் தன் கடின உழைப்பால் தொடர்ந்து கமெர்சியல் ஹிட் கொடுத்து இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

vijay rajini

அவரின் பட்டத்தை விஜய்க்கு கொடுப்பதா என்று சில பேர் கொந்தளிக்கின்றனர். இதை பற்றிய விவாதத்தில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது விஜயுடன் தனஞ்செயனுக்கு கொஞ்சம் நெருக்கம் இருப்பதால் விஜயை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது விஜய்க்கு யார் நம்மை பேசுகிறார்கள்? எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பற்றி எல்லாம் கவலையில்லையாம்.

என்ன சொன்னாலும் i don’t care என்ற மன நிலையில் இருப்பவர் தான் விஜய். இதே ஊடகங்கள் விஜயை தூற்றினாலும் அதற்கெல்லாம் மசிய ஆள் இல்லை விஜய். மேலும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றியும் அவர் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவருக்கு ஒரு ஆசை இருந்தது. அது தளபதி பட்டம் மட்டும் தான்.

vijay dhanjeyan

அந்த பட்டம் வந்தபிறகு விஜய் மிகவும் சந்தோஷப்பட்டாராம். மேலும் மக்கள் இந்த தளபதி பட்டத்தை கொடுத்ததனால் மக்கள் நம்மை நல்ல படியாக ஏற்றுக் கொண்டனர் என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டாராம். மற்றப்படி வேறு பட்டத்திற்கெல்லாம் ஆசைப்படவில்லை என்று தனஞ்செயன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini