மாலு எனச் செல்லமாக அழைப்பார் விஜய்.. சூப்பர் சீக்ரெட்டை பகிர்ந்த மாளவிகா...

மாஸ்டர் படத்தின் வெளியீட்டிற்கு பல தரப்பில் இருந்து பேராதரவு பெருகி வருகிறது. விஜய் நடிப்பில் பெரிய இடைவேளைக்கு பிறகு வெளியாக இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். பிகில் படத்திற்கு பிறகு வெளியாக இருக்கும் படம் என்பதால், ரசிகர்கள் செம ஆவலாக காத்திருக்கிறார்கள்.
முதல்முறையாக, விஜயிற்கு மாளவிகா ஜோடியாக நடிக்கிறார். படத்தின் வெளியீடு இன்னும் சில நாளே இருக்கும் நிலையில், படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள். அதுபோல, மாளவிகாவும் தனது இன்ஸ்டாவில் படத்திற்கு தொடர்ந்து ப்ரோமோஷன் செய்து வருகிறார். அதன் பொருட்டு, தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் சாட் செஷனில் ஈடுபட்டார்.
அதில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக விஜய் என்னை மாலு எனச் செல்லமாக அழைப்பார். மலையாளியான மாளவிகா மும்பையில் செட்டிலாகி இருக்கிறார். அங்கு குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளை மாலு எனச் செல்லமாக அழைப்பார்கள். தளபதி விஜயை அண்ணன் என அனைவரும் அழைப்பார். அதனால், மாளவிகாவின் மீது விஜய் தங்கை பாசம் காட்டுவது ஆச்சரியமில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Vijay Sir calls me Malu! ☺️ https://t.co/KXFg7fHUPG
— malavika mohanan (@MalavikaM_) January 11, 2021