ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோ….இன்று ரீ ரிலீஸாகும் சிவகாசி
விஜய் நடிப்பில் முக்கியமான வெற்றி படங்களில் சிவகாசி படத்திற்கு தனி இடம் உண்டு. விஜயுடன் அசின், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்திருந்த இப்படத்தை திருப்பாச்சி வெற்றியை அடுத்து பேரரசு இயக்கியிருந்தர். விஜய்யின் மாஸ் ஆக்ஷன், சென்டிமென்ட் மற்றும் பிரகாஷ் ராஜின் மிரட்டலான வில்லத்தனம் என அனைத்தும் திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்தன. இருவருக்கும் இடையேயான பன்ச் வசனங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீகாந்த் தேவா இசையில் கோடம்பாக்கம் ஏரியா, தீபாவளி தீபாவளி, வாட வாடமற்றும் இது என்ன இது என்ன போன்ற பாடல்கள் அன்ற்டைய கால கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.
சென்னையில் வெல்டிங் கடை நடத்தும் சிவகாசி என்ற முத்தப்பா, பல வருடங்களுக்குப் பிறகு தனது தாய் மற்றும் தங்கையைச் சந்திப்பதற்காக சொந்த ஊருக்குச் செல்கிறார். அங்கு தனது சொந்த அண்ணனான உதய்யப்பா(பிரகாஷ் ராஜ்) செய்யும் அரசியல் மற்றும் அராஜகங்களை ஒடுக்கி, தனது குடும்பத்தை எப்படி வறுமையில் இருந்தும், அவமானங்களில் இருந்தும் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கரு. இந்த அண்ணன்-தம்பி மோதல் மற்றும் அம்மா சென்டிமென்ட் கலவை தான் குடும்ப ரசிகர்களை இன்றும் ஈர்க்கும் முக்கிய காரணமாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு திரைக்கதை முக்கிய பங்கினை வகித்தது. .
இந்த நிலையில் 2005-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டாசு கிளப்பிய இப்படம், இன்று டிஜிட்டல் மாற்றங்களுடன் மீண்டும் ரீ ரிலீஸாகிறது. ஏற்கெனவே விஜய் நடித்த கில்லி ரீ ரிலீஸீல் சாதனை படத்தது. இந்த நிலையில் சிவகாசியும் அந்த லிஸ்இல் இணையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
