Sigma ரிலீஸுக்கு நாள் குறித்த விஜய்யின் மகன்!
கோலிவுட்டின் டாப் ஹீரோவும், இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான 'தளபதி' விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' சமீபத்தில் வெளியானது. விஜய்யை தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் கால் பதிக்கிறார்.
எல்லோரும் அப்பாவை போல் மகனும் ஹீரோவாக நடிப்பார் என்று நினைத்து கொண்டிருக்கையில், டக்கென ரூட்டை மாற்றி இயக்குநராகி விட்டார் ஜேசன் சஞ்சய். இவர் இயக்கியிருக்கும் முதல் படம் தான் 'சிக்மா'.
இதில் சந்தீப் கிஷன் தான் ஹீரோ. அவருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால் படத்தை இரண்டு மொழிகளிலும் உருவாக்கியுள்ளனர். ஹீரோயினாக ஃபரியா அப்துல்லா வலம் வரப்போகிறார்.
Mark the date for the heist on October 2. 💰 #SIGMA is all set to light up the screens. 🔥 @official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @MagaAnan… pic.twitter.com/kGcmWQh07Y
— Jason Sanjay Official (@official_jsj) August 18, 2026
இந்த படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்களும் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தற்போது, படத்தை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.