Categories: Cinema News latest news

விஜய் பையன் கூப்பிட்டால் உடனே சென்றுவிடுவேன்.! அவ்வளவு நம்பிக்கையா?!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் விஜய். இவருக்கென தனி அறிமுகம் தேவையில்லை. இவரது இளமையை கண்டு ரசிக்காத ரசிகர்/ரசிகை இல்லை. இவருக்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்றால் ஒருத்தரும் நம்ப மாட்டார்கள்

அவர் பெயர் ஜேசன் சஞ்சய். இவர் திரைத்துறையில் நுழைய லண்டனில் படித்து வருகிறார். இவரும் விஜய் போல நடிப்பு துறையில் தான் கால்பதிப்பார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என பல வதந்திகள் உலாவந்தன.

இதையும் படியுங்களேன் –ஒரே போன் 2 சிம்கார்டு.! காலில் விழுந்த விஜய் சேதுபதி.! தெறிக்கும் வீடியோ.!

அதிலும், ஷங்கர் இயக்க, விக்ரம் மகன் துருவ் விக்ரம், சஞ்சய் ஆகியோர் நடிக்க உள்ளனர் எனும் வதந்தி எல்லாம் தீவிரமாக உலா வந்தது. ஆனால் அதெல்லாம் பொய் என பின்னாளில் தெரியவந்துவிட்டது.

அண்மையில், விக்ரம் – துருவ் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படம் வெளியானது. அதற்கு பேட்டியளித்த துருவ் விக்ரம், ‘ ஜேசன் சஞ்சய் இயக்கும் போது நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக சென்றுவிடுவேன் ‘ என்பது போல பதிலளித்துள்ளார் துருவ் விக்ரம்.

Manikandan
Published by
Manikandan