கேஜிஎஃப் ராக்கி பாயாக மாறிய விஜய்.. பிரபலம் சொல்லும் சுவாரஸ்ய தகவல்
நேற்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அந்த பேச்சு இன்று தமிழக அரசியல் களத்தில் பெரும் சூடாக பற்ற ஆரம்பித்துவிட்டது. இதைப் பற்றி ஒரு மூத்த அரசியல் விமர்சகர் சொல்லும்போது கே ஜி எஃப் படத்தில் வரும் ராக்கி பாயாக மாறிவிட்டார் விஜய். அந்த விஷயத்தை தான் விஜய் கையில் எடுத்திருக்கிறார் என அந்த அரசியல் விமர்சகர் அதுவும் படங்களே பார்க்காத அந்த விமர்சகர் சொல்லும்போது இன்னும் விஜயின் அந்த பேச்சு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என இதிலிருந்தே நமக்கு புரிகிறது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்பதை தாண்டி எல்லோரும் பேசக்கூடிய அரசியல் தலைவராக மாறிவிட்டார் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் ஆளும் மாநில அரசு மத்திய அரசு என மறைமுகமாக தாக்கி பேசினார். பாசிசம் பாயாசம் என்றெல்லாம் வார்த்தை ஜாலம் போட்டு அவருடைய பேச்சில் ஒரு தெளிவு இருந்தது. அப்போதைய பேச்சுக்கு பிஜேபியில் இருந்து கூட சில விமர்சனங்கள் கண்டனங்கள் எல்லாம் எழுந்தன.
அண்ணாமலை கூட சமீபத்தில் விஜயை விமர்சித்திருந்தார். சீமானும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார் .ஆனால் திமுகவை பொருத்தவரைக்கும் விஜய் பேசுவதற்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாதீர்கள். எதிர்வினை ஆற்றாதீர்கள் என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கு ஒரு உதாரணமாக விஜய் அரசியலுக்கு வந்ததும் அதைப்பற்றி கேட்டதற்கு வரட்டும் யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் வந்து பார்க்கட்டும் என பாசிட்டிவாக சொல்லி கடந்து போயிருந்தார் உதயநிதி.
ஆனால் நேற்று நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அந்த பேச்சுக்கு விஜயை மறைமுகமாக தற்குறி என அமைச்சர் சேகர் பாபு கூறினார். இதில் அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் விஜயும் விசிக தலைவர் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ஒரு எட்டு பக்க அறிக்கையுடன் கலந்து கொள்ளப் போவதில்லை என திருமாவளவன் அறிவித்திருந்தார்.
ஆனால் அதையும் மீறி ஒரு அம்பேத்கர் விழாவில் கூட திருமாவளவனால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என கூறியிருந்தார் விஜய். இதை விசிக தரப்பிலிருந்து ‘ஏன் அந்த எட்டு பக்கம் அறிக்கையை விஜய் படிக்கவில்லையா’ என்று அவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன.
இதற்கிடையில் விஜயால்ல் அரசியல் பேச முடியுமா? தைரியமாக அவரால் கருத்துக்களை சொல்ல முடியுமா இல்லை என்றால் அறிக்கை மட்டுமே தான் விடுவாரா என்ற வகையில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதை எல்லாம் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு நேற்று நடந்த அந்த பொது புத்தக வெளியீட்டு விழாவில் அனல் தெறிக்க பேசியது அனைவரும் மத்தியிலும் ஆசிரியயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் 2026 ஆம் ஆண்டு ஒரு கூட்டணியுடன் கண்டிப்பாக விஜய் வருவார். அதிமுக விசிக தவெக என 3 கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைக்கும். அதற்கான முன்னேற்பாடு தான் இந்த விழாவில் அவர் பேசியது என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.