பனையூர் பண்ணையாருக்கு இன்னும் செய்தி போகல போல.. அஜித்தை பாராட்டுவதில் கூட பாரபட்சமா?

by Rohini |   ( Updated:2025-01-13 10:54:39  )
vijayajith
X

முடிவுக்கு வந்த நீண்ட நாள் விரதம்: எப்படியோ நீண்ட நாள் விரதத்தை முடித்திருக்கிறார் அஜித். ஆம் பேட்டியே கொடுக்க மாட்டேன் என கூறியவர் துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் தன்னுடைய அணிக்காகவும் தன் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்தும் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதில் அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா சார்பிலும் இங்கிருந்து பல ஊடகங்கள் அங்கு சென்றனர். அவர்களுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார் அஜித். அவருடைய நீண்ட நாள்.. இல்லை இல்லை நீண்ட வருட கனவு என்றே சொல்லலாம்.

சொற்ப சம்பளம்: ஆரம்பத்தில் கார் ரேஸ், பைக் ரேஸ் என அதிகமாக ரேஸ்களில் ஈடுபட்டு வந்தவர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்ததனால் ரேஸிலும் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. படங்களில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் அவ்வப்போது பந்தயங்களில் கலந்து கொண்டு வந்தார். ஆனால் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளம் வெறும் லட்சக்கணக்கில் தான். அதனால் அவருக்கு என ஸ்பான்சர் செய்ய ஆள் கூட இல்லாத நேரம் அது.

அஜித் என்ற மனிதருக்காக: ஆனால் இப்போது ஒரு அணியின் உரிமையாளராக அந்த அணிக்கு கீழே பல வீரர்கள் இருக்க அந்த அணிக்காக ஸ்பான்சர் செய்து இருக்கிறார் அஜித். கார் பந்தயத்தை பணக்கார விளையாட்டு என்று சொல்லலாம். குறிப்பாக பணக்காரர்கள் பார்க்கும் விளையாட்டாக கூட இது கருதப்படுகிறது. அஜித் என்ற ஒரு மனிதருக்காக அப்படி ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பந்தயத்தை பார்க்க சென்றிருந்தனர். திரை பிரபலங்கள் சிலரும் அங்கு சென்று இருந்தனர்.

வாழ்த்துக்கள் மழையில் அஜித்:மிகவும் கஷ்டப்பட்டு பல போராட்டங்களுக்கு மத்தியில் அவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அவருடைய இந்த வெற்றியை பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதில் முதல் வாய்ப்பாக கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்தை கூறினார். அடுத்தபடியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரஜினி ,சிபி சத்யராஜ், சாந்தனு, பிரசன்னா ,சிவகார்த்திகேயன் ,சிம்ரன் என அடுத்தடுத்து வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருக்கின்றனர்.

தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து மழைகள் குவிகின்றன. சமீபத்தில் கூட ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் அஜித்துக்காக தன்னுடைய வாழ்த்தை கூறி இருக்கிறார். இந்த நிலையில் விஜயிடம் இருந்து இதுவரை எந்த ஒரு வாழ்த்தும் அஜித்துக்கு சென்றடையவில்லை. பனையூர் பண்ணையாருக்கு எப்பொழுதுமே பரபரப்பாக பேசப்படும் செய்தி தாமதமாகவே போய் சென்றடையும். ஒரு வேளை அஜித்தின் இந்த செய்தி கூட இன்னும் அவர் காதுக்கு போய் சேரவில்லையோ என்னவோ?


இன்னும் அவருடைய வாழ்த்தை கூறவில்லை. ஆனால் தெரிந்தும் தன்னுடைய பாராட்டை கூறாமல் இருக்கிறாரோ என்னவோ? ஏனெனில் தான் அரசியல் ரேஸ் என்பதில் குதித்து பெரிய மாநாட்டை நடத்தி வெற்றிகரமாக ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கும் நிலையில் அஜித்திடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் அவருக்கு வாழ்த்து கூற வேண்டும் என நினைக்கிறாரோ என்னவோ விஜய்? என வலைப்பேச்சு அந்தணன் இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்

Next Story