×

திடீரென ரசிகர்களை சந்தித்த விஜய்... விஷயம் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் தனது ரசிகர்களை திடீரென சந்தித்து இருக்கிறார்.
 
 

தமிழ் சினிமாவின் ப்ளாக்பஸ்டர் ஹீரோ தளபதி விஜய் தான். கொரோனாவால் திரையரங்குகளின் நிலை என்னவாகும் என பலரும் கவலையில் இருந்தனர். என்ன ஆனாலும் படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என விடாப்பிடியாக நின்று மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாகியது. எக்கசக்க வசூலை வாரி கொண்டது மாஸ்டர். இதனால் விஜயின் புகழ் எக்கச்சக்கமாக எகிறியது.

இப்படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரியங்கா மேனன் நாயகியாக நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தளபதி தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து இருக்கிறார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடிய அந்நிகழ்வின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், விஜய் தனது படத்தின் கெட்டப்பில் இருப்பதால் செம வைரலாக இப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது. திடீரென ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்ததற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News