vijay
Vijay: தளபதி விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் வெற்றி படமாக இருக்கும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குனர் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வாரிசு நடிகராக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் விஜய். ஆனால் முதல் பல படங்கள் அவருக்கு நெகட்டிவ் விமர்சனமாகவே கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ச்சியாக நல்ல படங்களை தேர்வு செய்து முன்னேறினார்.
தற்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களின் வசூல் சாதாரணமக 700 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் வரும் சம்பளம் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இருந்தும் தன்னுடைய சினிமாவின் உச்சபட்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் திடீரென அரசியல் கட்சியை தொடங்கினார். அது மட்டுமல்லாமல் தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலக இருப்பதாகவும் அறிவித்த அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த வகையில் அவர் தற்போது கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கம் இப்படத்தில் பாபி தியோல் முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் இத்திரைப்படம் விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் விஜயின் கேரியரில் முக்கிய திரைப்படமாக இன்று வரை பேசப்படும் துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய படங்களில் இரண்டாம் பாகமாக இயக்க வேண்டும் என்றால் அது துப்பாக்கி தான் என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த அவர் பேசும்போது, துப்பாக்கி படத்தின் கிளைமாக்ஸை இரண்டாம் பாகம் இயக்க வேண்டும் என தான் அவர் மீண்டும் தன்னுடைய பணிக்கு திரும்புவது போல அமைத்திருந்தேன். இரண்டாம் பாகம் வரும்போது அவருடைய பணியிலோ இல்லை மீண்டும் விடுமுறைக்கு வரும்போதோ என காட்சியை வைக்கலாம் என்ற ஐடியா இருந்தது.
அப்படத்தில் கூட சத்தியம் ஒரு காட்சியில் சொல்லி இருப்பார். நான் கஷ்டப்பட்டு சப் இன்ஸ்பெக்டரிலிருந்து இன்ஸ்பெக்டராக மாறுவேன் இவன் ஒவ்வொரு விடுமுறையில் வரும்போதும் என்னை மறுபடியும் இறக்கி விட்டு செல்வான் என தெரிவித்திருப்பார். அதுபோல அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஐடியா என்னிடம் இருந்ததாக கூறுயிருக்கிறார்.
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…