Categories: Cinema News latest news

விஜய்யால் 8 டேக் போயிடுச்சி.! தயவு செய்து நடித்துவிடுங்கள் சார்.! கெஞ்சிய இயக்குனர்.!

2001 பொங்கல் தினத்தன்று 2 மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியானது. ஒன்று விஜய் திரைப்படம் இன்னொன்று அஜித் திரைப்படம். அப்படி ஒரு ஆரோக்கியமான போட்டி அது. விஜய் ரசிகர்களை கேட்டால் பிரண்ட்ஸ் திரைப்படம் தான் வின்னர் என்று கூறுவார்கள். அதே அஜித் ரசிகர்களிடம் கேட்டால் தீனா திரைப்படம் தான் வெற்றி என்று கூறுவார்கள். உண்மையில் இது இரண்டும் காலம் கடந்து பேசப்படும் நல்ல வெற்றி திரைப்படங்கள் தான்.

அதிலும் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவுடன் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா , சார்லி அடிக்கும் லூட்டி இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சிரிப்பு வரும். அப்படி ஒரு திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில் நடந்த அனுபவங்களை நடிகர் வடிவேலு அண்மையில் தெரிவித்து இருந்தார்.

அதில், அந்த பங்களாவுக்குள் நுழைந்து வடிவேலு மேல் கருப்பு பவுடர் கொட்டும் காட்சி எடுக்கையில், மொத்த டீமும் சிரித்து விட்டதாம். அதன் பிறகு எதோ சமாளித்து எடுக்க ஆரம்பித்தால் விஜய்யால் சிரிப்பை அடக்க சுத்தமாக முடியவில்லையாம்.

இதையும் படியுங்களேன் – வெடித்தது சர்ச்சை.! போஸ்டரிலேயே பூகம்பமா.?! 500 கோடிடா கொஞ்சம் சும்மா இருங்கடா.!

எவ்வளவோ முயன்றும் விஜயால் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். அதனால்,  8 டேக் தண்டி சென்று கொண்டிருந்ததாம். இறுதியில் இயக்குனர் விஜயிடம் சார் பல்லால் நாக்கை கடித்துக்கொள்ளுங்கள் சிரிப்பு வராது என்று கூற அவரும் முயற்சி செய்து பார்த்தாராம் முடியவில்லையாம். இறுதியில் எப்படியோ அந்த காட்சி முடிக்கப்பட்டதாம்.

அதன் காரணமாகத்தான் இறுதி வரை விஜய் சிரித்தபடியே இருந்து ராதாரவியிடம் திட்டு வாங்கி தேவயாணி பெட்டியை தூக்கி செல்வது போல காட்சியை எடுத்து முடித்தார்கள் போல.

Manikandan
Published by
Manikandan