×

2021ஐ குறிவைத்த விஜய்: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 65’ படம் கொடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 

 


இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 65’ திரைப்படம், வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் நீண்ட விடுமுறை உள்ள பொங்கல் தினத்தில் தளபதியின் படம் வெளியானால் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த படத்தின் வெற்றியை பொறுத்து விஜய் ஒரு முக்கிய முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News