×

தளபதி 67 திரைப்படத்தின் புதிய அப்டேட்... ரசிகர்கள் ஷாக்

தளபதி 67 திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
ceaf7402-c0a5-40e9-9704-da29b65381dd

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது, எதிர்பார்த்ததை போலவே Beast படத்தின் போஸ்டர்கள் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் தளபதி 67 திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News