×

விஜய் தேவாரகொண்டாவால்தான் படம் பிளாப் ஆனது – தயாரிப்பாளர் போர்க்கொடி !

விஜய் தேவாரகொண்டா நடிப்பில் உருவான வேல்டு பேமஸ் லவ்வர் திரைப்படம் அட்டர் பிளாப் ஆனதை அடுத்து அதன் தயாரிப்பாளர் அவரிடம் இருந்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

 

விஜய் தேவாரகொண்டா நடிப்பில் உருவான வேல்டு பேமஸ் லவ்வர் திரைப்படம் அட்டர் பிளாப் ஆனதை அடுத்து அதன் தயாரிப்பாளர் அவரிடம் இருந்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

விஜய் தேவாரகொண்டா நடிப்பில் காதலர் தினத்தன்று வெளியான வேல்டு பேமஸ் லவ்வர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்துக்காக நான்கு கெட் அப்புகளில் நான்கு ஹீரோயின்களுடன் அவர் நடித்திருந்தார். டிரைலர் ரிலீஸான போதே படம் அர்ஜுன் ரெட்டி போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லி விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை நெருக்கி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள தயாரிப்பாளர் ‘கதையில் தலையிட்டு மாற்றங்களை செய்து சில காட்சிகளை தானே இயக்கவும் செய்தார் விஜய் தேவாரகொண்டா. இதனால்தான் படம் தோல்வியடைந்தது. அவருக்கு சம்பள பாக்கி இருந்த போது அதற்காக எனது வீட்டை எழுதிக் கொடுத்தேன். இப்போது நஷ்டத்தை ஈடுகட்ட அவர் அந்த வீட்டைத் திருப்பி தரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்த புகாரால் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் தேவாரகொண்டா, வேல்டு பேமஸ் லவ்வர், vijay devarakonda, wolrd famous lover, producer

Producer complained about vijay devarakonda

From around the web

Trending Videos

Tamilnadu News