×

இடுப்பு தெரியும்படி புடவை  கட்டி பெண்வேடமிட்ட விஜய் - வைரலாகும் சிறு வயது புகைப்படம்!

பிரபலங்கள் என்றாலே பொதுவாக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்கள் வெளியாவதில், அவர்களை பற்றிய ரகசியங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்வதில் அதிக ஆவர்வம் காட்டுவதுண்டு. அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் தன்னுடைய சிறு வயதிலேயே பெண் வேடம் அணிந்துள்ள போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது திறமையால் படி படியாக முன்னறி வந்த விஜய்க்கு இன்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த  லேடி கெட்டப் போட்டோவை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து பயங்கரமாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இதற்கு முன்னர் விஜய் -  சிம்ரன் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான பிரியமானவளே படத்தில் இடம்பெற்ற ஜூன் ஜூலை மாதத்தில் என்ற பாடலுக்கு புடவை கட்டி பெண் வேடமிட்டு கியூட்டாக நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay
Caption

From around the web

Trending Videos

Tamilnadu News