Categories: Cinema News latest news

யாரும் எதிர்பாராத சம்பவம்!.. ‘வாரிசு’ பட க்ளைமாக்ஸில் ஆச்சரியப்படுத்திய விஜய்!..

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்க தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் ,பிரபு, குஷ்பு, சியாம், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் முக்கால் வாசி படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடைபெற்றது. க்ளைமாக்ஸின் சில காட்சிகள் மட்டும் சென்னையில் நடைபெற்றதாம்.

இந்த படத்தை பற்றியும் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்யம் பற்றியும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் சமீபகாலமாக பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமன் தீவிர விஜய் ரசிகரும் கூட. அவருக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் இருக்கின்றது.

vijay

அந்த குழந்தையும் விஜய் ரசிகையாம். தெறி படத்தில் வரும் ஈனா மீனா டிகா பாடல் வந்தாலே விஜய் அங்கிள் என்று மிகவும் சந்தோஷமாக இருப்பாராம். இந்த தகவலை கணேஷ் விஜயிடம் கூற உடனே படப்பிடிப்பு தளத்திலேயே உங்கள் மகளுக்கு வீடியோ கால் போடுங்கள் பேசலாம் என்று கூறினாராம்.

அவர் மகளுக்கு அப்போது காய்ச்சல் இருந்த காரணத்தால் பேசவில்லையாம். அதற்கும் விஜய் சென்னை வரும் போது கண்டிப்பாக அழைத்து வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். சொன்ன மாதிரி வாரிசு படத்தின் க்ளைமாக்ஸ் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.

இதையும் படிங்க : வெற்றியை எதிர்பார்த்து அட்டர் ஃபிளாப் ஆன அந்த படம்!.. தோல்விக்கு காரணமாக இருந்த சூர்யா!..

கணேஷ் இந்த சமயத்தில் மகளை அழைத்துக் கொண்டு போனால் விஜய்க்கு கவனம் சிதறுமே என்று பயம் இருந்தாலும் இந்த வாய்ப்பை தவறவிட்டால் தன் மகளுக்கு அடுத்த வாய்ப்பு எப்பொழுது வரும் என கருதி தன் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

ganesh

ஆனால் விஜய் கணேஷின் மகளை பார்த்ததும் மிகுந்த சந்தோஷத்தில் தழுவிக் கொண்டாராம். மேலும் படப்பிடிப்பில் ஒரு 15 நிமிடம் பிரேக் எடுத்துக் கொண்டு வந்து அந்த 3 வயது குழந்தையிடம் கொஞ்சம் நேரம் விளையாடிக் கொண்டு இருந்தாராம். படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியமாம். ஆக்‌ஷன் சொன்னால் மனுஷன் தீயாய் பறக்கிறார். ஆனால் சூட்டிங் தவிர்த்து மற்ற நேரத்தில் ஆளே மாறிவிடுகிறார் என்ற ஆச்சரியத்தில் இருந்தார்களாம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini