#image_title
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் வலியால் துடித்துக் கொண்டிருக்க அந்த கட்டிலை வெளியில் எடுத்து போட சொல்கிறார் விஜயா. முத்து டைனிங் ஹாலில் போட்டுக் கொள்ளவா என அழைக்கிறார். பின்னர் மீனா தன்னுடன் பூ கட்டுபவர்களிடம் முத்து நடந்து கொண்டதை கூறி சந்தோஷப்படுகிறார். அப்போ சீதா கால் செய்து அவரை மருத்துவமனைக்கு வர சொல்கிறார்.
அங்கு வரும் மீனாவிடம் இனிமே இங்க வாங்கும் பூவெல்லாம் உனக்கு தான். இனிமே நீ வீட்டுக்கு காசு கொடுக்க வேண்டாம். நான் சமாளித்துக் கொள்கிறேன் என கூறுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வர மீனா அவரை பார்த்து விடுகிறார். சீதா என்ன விஷயம் என நர்ஸிடம் கேட்க இரண்டாவது குழந்தை டிரீட்மென்ட்காக வந்திருப்பதாக கூறுகிறார்.
இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
இதைக் கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். வீட்டிற்கு இதே கவலையுடன் வர மனோஜ் மற்றும் ரோகிணி ஸ்வீட்டுடன் வருகின்றனர். கடையில் பிசினஸ் நல்லபடியாக முடிந்ததாகவும் கூறுகின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் கோயிலில் ஏற்பாடு செய்துள்ள ஃபங்ஷனை பார்த்து ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார். வீட்டினர் எல்லோரும் கிளம்பி சென்றதைப் பார்த்த கோபி எதற்காக போனார்கள் என்பதை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறார்.
#image_title
வெளியில் சென்ற அமிர்தா தாத்தாவிற்கு வாட்ச் வாங்கி வருகிறார். எழில் நம்மதான் போகப் போவதில்லை எதுக்கு இதை வாங்கனு எனக் கேட்கிறார். கோயிலில் இனியா எழில் வருவாரா என கேட்டுக் கொண்டிருக்கிறார். இதில் வருவான் என நம்புகிறார்.
இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் தங்கமயில் சரவணன் உடன் பேசிக்கொண்டே அவர்கள் கொஞ்சு கொண்ட புகைப்படங்களை குரூப்பில் அனுப்பி விடுகிறார். இதைத் தொடர்ந்து எல்லோரும் அதை பார்த்து வெட்கப்பட செந்தில் மற்றும் கதிர் சரவணன் கால் செய்கின்றனர்.
ஏன் யாரும் அந்த மெசேஜுக்கு ரிப்ளை செய்யவில்லை என சரவணன் கேட்க செந்தில் அந்த புகைப்படங்களுக்கு பதில் சொல்ல முடியாது. நீ வேண்டுமானால் அதை பார் எனக் கூறி வைத்து விடுகிறார். இதை பார்க்கும் மயில் மற்றும் சரவணன் அதிர்ச்சி அடைகின்றனர். வீட்டில் எல்லாரும் இந்த புகைப்படங்களை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…