தூத்துக்குடியில் வேலவன் ஹைபர் மார்க்கெட் என்ற பெயரில் உதயமாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சென்னை டிநகரில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை உருவானது.
கடந்த ஐந்து வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கடை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பண்டிகை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஆஃபர் உடன் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது கே.பி.ஒய் பாலா பொங்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது பாலா வருங்கால மாமனார் மாமியாருக்காக ஷாப்பிங் செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போ உங்க லவ்வர் யாரு என்று கேட்க அதை இதுக்கப்புறம் தான் தேர்வு செய்ய வேண்டும். நான் தேர்வு செய்ய முடியாது இந்த வீடியோ பார்த்துட்டு ஏதாச்சு ஒரு பொண்ணு என்ன தேர்வு செய்தால் அவங்க அம்மா அப்பாவுக்கு இந்த டிரஸ் கொடுத்து விடுவேன் என கவுண்டர் போட்டுள்ளார்.
விஜே சுவாதியுடன் சேர்ந்து பாலா ஷாப்பிங் செய்ய அவரை பார்த்த பலரும் ஓடி வந்து பாலா செய்த உதவிகளுக்காக நன்றி கூறி பாராட்டி உள்ளனர். ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு கவுண்டர் போட்டு ஷாப்பிங் முழுவதையும் கலகலப்பாக செய்துள்ளார் பாலா.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…