சஞ்சய் கொடுத்த பரிசு.. நெகிழ்ந்துபோன டிடி

விஜய் தொலைக்காட்சியில் புகழ் மிக்க ஆங்கர்களில் டிடி என்கிற திவ்யதர்ஷினி முக்கியமானவர். இ
 
vijay tv dd

விஜய் தொலைக்காட்சியில் புகழ் மிக்க ஆங்கர்களில் டிடி என்கிற திவ்யதர்ஷினி முக்கியமானவர். இவர் தனது தனித்துவமான பேச்சு நடை மற்றும் கலகலப்பான தொகுப்பாள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. பல முக்கிய நடிகர்கள் , தலைவரகளை பேட்டி எடுத்துள்ளார். 

அந்த வலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை பேட்டி எடுத்திருந்தார். அந்த பேட்டி தமிழகமெங்கும் வைரலானது. பல லட்சம் வியூஸ்களை அள்ளியுள்ளது.

sanjay

இந்த நிலையில் டிடிக்கு சஞ்சய் பூங்கொத்துடன் வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளார். அதில் அருமையான இண்டர்வியூக்கு   நன்றி  மேடம் என்று எழுதியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அதில், "சுபாஷ் அண்ணா, இந்த அன்பான பரிசுக்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் உண்மையிலேயே மிகவும் அன்பானவர். மேலும், Lyca Productions-ல் உள்ள அனைவருக்கும் என் நன்றி. நீங்கள் எப்போதும் என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடத்தி வருகிறீர்கள். 

sanjay

என் அன்புக்குரிய ஜேசன் சஞ்சய் டார்லிங், உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் மரியாதைக்கு மிக்க நன்றி. அதை நான் மிகவும் மதிக்கிறேன். குறிப்பாக நீங்கள் அனுப்பிய பூங்கொத்து என்னை மிகவும் நெகிழ வைத்தது.

dd

#Sigma திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.


 

From Around the web