Connect with us

Cinema News

விஜய் டிவியின் அடுத்த ஸ்டார் ஜோடி..! கண்ணே கலைமானே சீரியல் நடிகைக்கு இந்த நடிகருடன் திருமணமா?

kanne kalaimanae: தமிழ் சீரியலில் சமீபத்திய காலமாக ஒன்றாக நடித்த நடிகர்கள் ஜோடியாகி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த லிஸ்ட்டில் தற்போது கண்ணான கண்ணே நாயகியும் இணைந்து இருக்கிறார். அவரின் கல்யாண சேதி தற்போதைய சின்னத்திரையின் ஹாட் டாப்பிக் ஆகி இருக்கிறது.

கண்ணே கலைமானே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். காதலியை திருமணம் முடித்த கையோடு விபத்தில் நியாபகத்தினை இழக்கிறார் ஹீரோ. அதனை தொடர்ந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். சில வருடங்கள் கழித்து அவர் வீட்டுக்குள் வர ஒரு கட்டத்தில் அவருக்கும் நினைவு வர இப்போ சீரியல் இரண்டு மனைவி கதையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க: அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு

இதில் பானு கேரக்டரில் நடிக்கும் பவித்ராவுக்கு தற்போது கல்யாண களைக்கட்டி இருக்கிறது. இவருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோவாக நடிக்கும் அமல் ஜித்துக்கும் காதல் உருவானது. இவர்கள் இருவரும் அம்மன் சீரியலில் ஒன்றாக நடித்தனர்.

 

அதைதொடர்ந்து, அமல் சன் டிவிக்கு சென்றுவிட்டார். பவித்ரா தற்போது விஜய் டிவியில் நடித்து வருகிறார். தற்போது இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து இருக்கும் நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top