Categories: latest news television

மீனாவுக்கு கிடைத்த சூப்பர் ஆர்டர்… கோமதியின் கோபத்தால் மிரண்ட குடும்பம்… கோபி நிலைமை அறிந்த ராதிகா!..

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களின் இன்றைய எபிசோடுகளுக்கான தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: மனோஜ் கரண்டை ஆன் செய்ததால் ஸ்விட்சில் கரண்ட்  ஷாக் அடிக்க விஜயா, அவரை பார்க்க வந்த பார்வதி, மனோஜ் மற்றும் ரோகிணி, ரவி மற்றும் ஸ்ருதி என அனைவருமே சிக்கிக் கொள்கின்றனர். இதை பார்க்கும் மீனா லாபகமாக கட்டையால் விஜயாவை அடித்து விடுகிறார். இதை தொடர்ந்து எப்படி நடந்தது என விசாரிக்க மனோஜ் முழிக்கும்போது முத்து அவரை கண்டுபிடித்து திட்டிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: 2025 லவ்வர்ஸ் டே-வுக்கு ரிலீஸாகும் புதிய படங்களின் லிஸ்ட்!.. கவினின் படம் மட்டும் டவுட்!…

திருமண மண்டபத்திற்கு அலங்காரம் செய்யும் பெரிய ஆர்டரை மீனா பிடித்து விடுகிறார். இதற்காக ஸ்வீட் வாங்கி வந்து குடும்பத்தினரிடம் கொடுத்து கொண்டு இருக்கிறார். முத்து எல்லோருக்கும் பிரியாணி செய்ய வேண்டும் எனக் கூறி அவரிடம் பணம் கொடுத்து செல்கிறார். தனக்கு தெரிந்த பெண் மூலம் ரோகிணியின் மாமாவாக நடித்தவரிடமே கறி வாங்க செல்கின்றனர்.

பாக்கியலட்சுமி: கோபிக்கு சர்ஜரி முடிந்து இருக்க செழியன் மற்றும் எழில் மட்டும் மருத்துவமனையில் இருக்கின்றனர். பாக்கியா ஈஸ்வரி மற்றும் இனியாவை சாப்பிட வைத்துவிட்டு வெறும் டீ குடிக்கிறார். இதை பார்க்கும் செல்வி அவரை கலாய்த்து கொண்டிருக்கிறார்.  

கோபியை எல்லா இடத்திலும் தேடி அலையும் ராதிகா அவர் கிடைக்காமல் போக வீட்டில் சோர்ந்து அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் மருத்துவமனை வரும் பாக்கியா ராதிகாவிற்கு ஃபோன் மூலமாவது சொல்லிவிடலாம் என முடிவெடுத்து கால் செய்கிறார். அவரை மருத்துவமனை வரச் சொல்லி கோபி நிலைமையை சொல்கிறார். ராதிகா அவரை பார்க்க வேண்டும் என கேட்க ஈஸ்வரி மறுத்துவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: கதிர் ஒரு ஆர்டருக்காக காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறார். பெண்கள் செல்லும் ட்ரிப் எனக் கூறி இருக்க ஒரு பெண்ணின் அப்பா சகல பாதுகாப்புடன் அவரை அனுப்புகிறார். ஆனால் பெண் கூட வராமல் இரண்டு ஆண்கள் ஏறுகின்றனர்.

இதையும் படிங்க: அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

அதை எடுத்து அவருடைய கணவரையும் வரக்கூடிய குழலியை அவர்களுடன் அனுப்பிவிடுகின்றனர். இந்த பக்கம், ஆண் நண்பர்கள் கடைக்கு செல்ல கதிர் அந்த பெண்ணிடம் நீ இப்போ போய் தான் ஆகணுமா என கேட்கிறார். அவர் வேண்டாம் எனக் கூற உன்னை பத்திரமாக வீட்டில் சென்று விட வேண்டியது என்னுடைய பொறுப்பு என கதிர் உறுதி கொடுத்து விடுகிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily