Vijay TV Promo: இதான் உங்க டக்கா? ஆறிப்போன கதைக்கு வார புரோமோ… விஜய் டிவிக்கு டிஆர்பி வாய்ப்பே இல்ல!
Vijay TV Promo: விஜய் டிவியில் முன்னணியில் இருக்கும் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான வார புரோமோ வெளியாகி இருக்கிறது.
சிறகடிக்க ஆசையை பொறுத்த வரை கடைசி சில வாரங்களாகவே இயக்குனர் கதையில் தேவையே இல்லாத விஷயங்களை நுழைப்பது போலவே காட்சிகளை கொடுத்து வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு சீரியல் மீது விறுவிறுப்பை குறைத்து கொண்டே வருகிறது.
ரோகிணி மீதான வழக்குகள் ஒன்றை தவிர மற்ற எதுவுமே இன்னும் தீர்க்கப்படவில்லை. அவரும் ஜாலியாக தப்பித்து கொண்டே இருக்கிறார். அந்த விஷயத்தால் கடந்த சில மாதங்களாகவே சிறகடிக்க ஆசையால் விட்ட முதல் இடத்தினை டிஆர்பியில் பிடிக்கவே முடியவில்லை.
அதை தொடர்ந்து கதைக்கு தேவையே இல்லாமல் வெறுப்பேற்றும் கதைக்களத்தால் மேலும் ரசிகர்களை இழந்து தற்போது டிஆர்பியில் 7 இடத்துக்கே சென்று விட்டது. இந்நிலையில் இந்த வார புரோமோவிலும் விறுவிறுப்பே இல்லை.
ஏனெனில் மனோஜ் தான் பேச இருக்கும் பள்ளியின் அட்ரஸை பார்க் நண்பரிடம் வாங்குகிறார். அருகில் இருக்கும் ரோகிணி அங்கு கிரிஷ் இருப்பதால் மனோஜ் பார்த்து விட்டதால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருக்கிறார். இதனால் என்ன பரபரப்பு தோன்றும்.
ஏனெனில் முதன்முதலில் மனோஜுக்கு பேசும் வாய்ப்பு வந்த போதே அது போர்டிங் ஸ்கூல் என தெரிந்து விட்டது. அதனால் கிரிஷ் படிக்கும் பள்ளியாக இருக்கும் என்று யோசிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் மீனாவும் ஒரு பள்ளிக்கு டெக்கரேஷன் செய்ய செல்கிறார். அதுவும் இதே பள்ளியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்த வாரமும் டிஆர்பி பாதாளத்துக்குதான் என்பதே உண்மை. இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் பாண்டியன் அடிப்பட்டு வீட்டுக்கு வர அப்போது மீனாவின் அப்பா, அம்மா வர மாப்பிள்ளைக்கு அரசு வேலை கிடைத்ததால் குலதெய்வம் கோயிலுக்கு போக அழைக்க வந்து இருக்கின்றனர்.
மீனாவின் அப்பா காசு கொடுத்ததற்காக பாண்டியனை பெருமையாக பேச சுகன்யா அந்த காசை மீனாதான் கொடுத்ததாக உண்மையை சொல்லி விடுகிறார். இதில் அவர்கள் பாண்டியனை திட்டிவிட்டு செல்ல மீனா கோபத்தில் சுகன்யாவை விளாசி விடுகிறார். இதனால் இந்த வாரம் விஜய் டிவி தொடர்கள் டல்லடிக்கும் என்றே அறியப்படுகிறது.
