×

இதுக்கு "விஜய்பாஸ்"னு பெயர் வச்சுக்கலாம்... பிக்பாஸ் 4-ல் ரக்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் தொகுப்பாளர் ரக்ஷன்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. இந்நிலையில் தற்ப்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி புகழ்பெற்ற ரக்ஷன் பங்கேற்க உள்ளதாக மறைமுகமாக அவரே தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரியோ,  ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ் என விஜய் டிவியை சேர்ந்தவர்களே பாதி பேரின் பெயர் அடிபடுகிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் வாய்ப்பு இல்லாதவங்களுக்கு கொடுங்கள் உங்க டிவியில் இருப்பவர்களுக்கே கொடுப்பதற்கு பிக்பாஸ் எதற்கு? விஜய்பாஸ் என்று பெயரிட்டுக்கொள்ளுங்கள் என காண்டாகிவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News