Categories: latest news television

ராமமூர்த்தி இறுதி அஞ்சலி… ரோட்டில் முத்து-மீனா சண்டை.. சிக்கிய தங்கமயில்…

Vijay TV: சிறகடிக்க ஆசை தொடரில் முத்து கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கஸ்டமராக வந்தவர் கல்யாணம் செஞ்சுக்கலாமா கூடாதா என்கிறார். செஞ்சுக்கோங்க ஆனா வேண்டாம் என்கிற மாதிரி குழப்புகிறார் முத்து. மனைவிகள் முதலில் பாசமாக இருப்பார்கள். திடீரென பேய் போல் ஆட்டம் போடுவார்கள் என பயமுறுத்துகிறார்.

அந்த நேரத்தில் முத்துவின் கார் மீது ஸ்கூட்டி ஒன்று மோதிவிடுகிறது. யார் என்று இறங்கி பார்த்தால் மீனா. மாறி மாறி சண்டையிட்டு கொள்கின்றனர். அங்கு வரும் டிராபிக் போலீஸ் முத்துவை திட்ட போக மீனா கடுப்பாகி எதுக்கு அவர திட்றீங்க என்கிறார். இவர் தான் என் கணவர் என சொல்ல கஸ்டமர் ஷாக் ஆகி விடுகிறார். கட்டிலுக்கு கொசுவலை அடைக்க முத்து ஆளை அனுப்புகிறார்.

இதையும் படிங்க: கோட் சிறப்பு காட்சி இருக்கா? இல்லையா?!.. காத்திருக்கும் படக்குழு!.. என்னதான் நடக்குது!…

ரோகிணி  அம்மாவுடன் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு மனோஜிடம் இருந்து கால் வருகிறது. வித்யாவுடன் இருப்பதாக கூற, அந்த நேரத்தில் அவர் ஷோரூம் வந்துவிடுகிறார். அவருக்கு ரோகிணி இடமிருந்து கால் வர உன்னுடன் இருப்பதாக மனோஜிடம் சொல்லி இருக்கிறேன் என்கிறார். வித்யா நான் இப்போ ஷோரூம்ல தான் இருக்கேன் மனோஜ் என்னை முறைத்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தியின் இறுதி சடங்கில் அனைவரும்  அமர்ந்து அழுது கொண்டிருக்கிறனர். ஒவ்வொருவராக அவரை பார்க்க வருகின்றனர். ராதிகாவின் அம்மா அழுது கொண்டே ஈஸ்வரிடம் ஆறுதல் கூற வர அவர் கையை தட்டி விடுகிறார். ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அவரை மேலே சென்று ஓய்வெடுக்கும்படி கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மாரிசெல்வராஜ், ரஜினி காம்போ அவ்வளவு தானா… நெல்சனை சமாளித்த சன்பிக்சர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் பேங்க் வாசலில் காத்திருக்க அவர் அம்மா கால் செய்கிறார். வீட்டில் நடந்த விஷயங்களை கூற அவர் சந்தோஷப்படுகிறார். பின்னர் நகைகளை எடுத்து வரக் கூற உன்னுடைய நகையை எடுத்து வந்துவிடு என்கிறார். மீனா மற்றும் ராஜி வீட்டிற்கு வர அரசி கோபித்துக் கொள்கிறார்.

thangamayil

அவரை அழைத்து மீனா என்னவென்று விசாரிக்க உங்களால் தான் வீட்டில் பிரச்சனை என்கிறார். ராஜியின் நிலைமை எடுத்துக் கூறியதும் அவருக்கு புரிந்து கொள்கிறது. அந்த நேரத்தில் கோமதி வந்துவிட நகைகளை எடுத்து பிரித்து வைக்க கூறுகிறார். தங்கமயில் நகை கருத்துப் போய் இருக்க அவர் அதிர்ச்சியாகிறார். அந்த நேரத்தில் பழனி வந்து விட ராஜியின் நகைகளை கொடுத்து விடுகின்றனர்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily