Categories: latest news television

கோபியை தடுத்த ஈஸ்வரி… சிக்கிய ரோகிணி… ஓவரா பேசுறீங்க தங்கமயில்..

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் அனைவரும் அழுதுக்கொண்டு இருக்கின்றனர். இப்படியே இருந்தா எப்படிப்பா? ஆக வேண்டிய காரியத்தை செய்யுங்க என்கின்றனர். கோபியை போய் வேட்டி கட்டிவர சொல்கின்றனர். அப்போ ஈஸ்வரிக்கு ராமமூர்த்தி சொன்னது நியாபகம் வருகிறது.

உடனே கோபியை எந்த காரியமும் செய்ய கூடாது எனக்கூறி மறுத்துவிடுகின்றார். இதனால் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோபி அதெல்லாம் முடியாது. எங்க அப்பாக்கு நான் செய்வேன் என்கிறார். ராதிகா மற்றும் அவர் அம்மா ஈஸ்வரியிடம் சண்டை போடுகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் ஈஸ்வரியை சமாதானம் செய்ய டிரை செய்ய ஈஸ்வரி மொத்தமாக மறுத்துவிடுகிறார்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

பாக்கியலட்சுமி தொடரில் மீனா கோபத்தினை சமாதானம் செய்ய முத்து வெள்ளை கொடியுடன் வருகிறார். பின்னர் அவர்கள் அல்வா சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். ரோகிணியிடன் எங்க போன என மனோஜ கேட்க கருங்காலி மாலை வாங்க போனதாக சமாளிக்கிறார்.

siragadikka aasai_pandian stores

பின்னர் வீட்டில் அனைவரும் இருக்க பாட்டி நிலக்கடலை மூட்டை அனுப்பி வைக்கிறார். எல்லாரும் தங்களுக்கும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனா கொஞ்சம் தனக்கும் வேண்டும் எனக் கேட்க கிரிஷிடம் கொடுத்து பாத்துட்டுவரணும் என்கிறார். இதை கேட்கும் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார்.

இதையும் படிங்க: நீங்க நடிச்சா போதும்… இந்த கிளாமர் ஆசை வேறையா? பிரியா பவானி சங்கர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் ராஜீயின் அம்மா வீட்டில் நகை குறித்து சந்தேகப்படுகின்றனர். பின்னர் ராஜீ அம்மாவிடம் நகையை முத்துவேல் எடுத்து வைக்க சொல்ல அவர் இனி இதை தொடமாட்டேன் என மறுத்துவிடுகிறார். இதனால் முத்துவேல் கடுப்பாகிவிடுகிறார்.

தங்கமயில் தன்னுடைய நகையை பார்த்து பயந்துக் கொண்டு இருக்கிறார். வீட்டிலே வைக்கலாம் எனக் கூற கோமதி அதற்கு மறுத்துவிடுகிறார். சரவணனை பார்க்க போக அவர் ஹோட்டல் காசை கொடுக்க தெரிந்தவர்களிடம் கடன் கேட்டு கொண்டு இருக்கிறார். என்னிடம் கேட்கலாமே என தங்கமயில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily