Categories: Cinema News latest news television

எங்களை ஏமாத்துனவரு எங்கப்பா!.. அவருக்காக எதுக்கு நான் ஃபீல் பண்ணனும்… மனம் உடைந்த தர்ஷிகா..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் எனும் சீரியலில் நடித்து வருபவர் நடிகை தர்ஷிகா. சின்னத்திரை மூலமாக சினிமாவில் பிரபலமாகி வரும் இவர் தற்சமயம் சினிமாவிலும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார் தர்ஷிகா. இவர் முதலில் மும்பையில் உள்ள ஒரு பெரும் நிறுவனத்தில் நல்ல வேளையில் இருந்தார். இதனால் சென்னையில் அவர் வைத்திருந்த பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு மும்பைக்கு தாயுடன் சென்று குடியேறினார்.

ஆனால் அந்த நிறுவனம் ஒருநாள் இவரை வேலையிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் மனம் உடைந்த தர்ஷிகா மீண்டும் சென்னைக்கு வந்து புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் நாடகத்தில் நடிக்கலாம் என்கிற ஆசை இவருக்கு வந்துள்ளது.

தொடர்ந்து பல நாடகங்களில் நடிப்பதற்கு முயற்சித்து வந்துள்ளார். ஆனால் எங்குமே இவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு வழியாக தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வாய்ப்பை பெற்றவர் இப்போது நிம்மதியாக இருக்கிறார்.

ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்போது உங்கள் தந்தையை பிரிந்து இருப்பது உங்களுக்கு வருத்தமாக உள்ளதா? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த தர்ஷிகா, எனது தந்தை என்னையும் என் தாயையும் ஏமாற்றிவிட்டு எங்களை விட்டு சென்றவர். அவருக்காக நான் ஏன் வருத்தப்படணும். என்னை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டது என் அம்மாதான். என பேசியுள்ளார் தர்ஷிகா.

இதையும் படிங்க: சின்னத்திரையின் ரம்யா கிருஷ்ணன்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? எமோஷனாகி அழுத டிஆர்

Published by
Rajkumar