Categories: latest news television

ஒன்னுல மூணு… மீனா, முத்துக்கு ஓவர் லவ்தான்ல!.. அடங்காத ஈஸ்வரி… சிக்கிய ராஜீ!..

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் போட்டியில் ஸ்ருதி எல்லோருடைய வாயிலும் அழகாக பேசுகிறார். பின்னர் மீனா கண்ணைக் கட்டிக்கொண்டு பூ கட்டுகிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஜோடிகளும் தங்கள் மனதில் இருப்பதை பேசுகின்றனர். அதில் மனோஜ் ரோகிணி என்னிடம் எதையுமே மறைத்ததில்லை என பேசுகிறார். இதனால் அவர் கண்கலங்குகிறார்.

ரவி ஸ்ருதியிடம் தனக்கு மூன்று பிள்ளைகள் வேண்டும் என கேட்க அவர் முடியாது என கூறி எழுந்து விடுகிறார். இதை தொடர்ந்து மீனா முத்துவை தந்தையாக நினைப்பதாக கூற அவரும் கலங்குகிறார். இது தொடர்ந்து ஜோடிகளிடம் சம்பளம் குறித்து கேட்கின்றனர். ரவி மற்றும் ஸ்ருதி எங்களுக்கு மற்றவர்களுடைய சம்பளம் தெரியாது எனக்கூறி விடுகின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன நடிகர் திலகம்..! பதுங்கினால் பூனை… பாய்ந்தால் புலி !

மனோஜ் முதலில் அதெல்லாம் சொல்ல முடியாது எனக் கூற போட்டிக்காக சொல்ல வேண்டும் என்கின்றனர். இப்போது ஆயிரத்தில் தான் வருகிறது என மனோஜ் கடைசியில் கூறுகிறார். ரோகிணி அம்பதாயிரம் சம்பாதிப்பதாகவும் அதில் 25 ஆயிரம் தனக்காக எடுத்துக் கொள்வதாகவும் கூறிவிடுகிறார். பின்னர்  மீனா மற்றும் முத்து இருவரும் மற்றவருடைய சம்பளத்தை மிகச் சரியாக கூற அரங்கமே  ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறது.

பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி மற்றும் எழில் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. எழிலின் பிரச்சனைக்கு முக்கிய காரணம் அமிர்தா தான் என அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இதில் கடுப்பான எழிலில் நான் படம் செய்யாமல் போனதற்கு அமிர்தா காரணம் இல்லை. எனக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்து அவரிடம் கதை சொல்ல போன நேரத்தில் தான் நீங்க ஜெயிலுக்கு போனீங்க.

உங்களால்தான் எனக்கு அந்த வாய்ப்பு விட்டுப் போனது என கூறுகிறார். என்மேல பழியை போடுறீயா என ஈஸ்வரி கேட்க நான் உண்மையை சொன்னேன் என்கிறார் எழில். அமிர்தா நான் இந்த வீட்டை விட்டு சென்று விடுகிறேன் எனக் கூற ஜெனி அவரை சமாதானம் செய்கிறார். பிரச்சனை பெருசாகவே பாக்கியா எழிலை வீட்டை விட்டு வெளியில் சென்று விடு என்கிறார்.

இதையும் படிங்க: கமல் ஹோஸ்ட் பண்ணத நான் பண்ண மாட்டேன்! பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்த நடிகர்

மயில் மற்றும் சரவணன் இருவரும் ஹனிமூனை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். பழனியை சக்திவேல் வீட்டிற்கு பங்ஷனுக்கு அழைக்கின்றனர். அவரும் பாண்டியனிடம் சொல்லி அங்கு கிளம்பி செல்கிறார். பாண்டியன் பழனியை நினைத்து சந்தோஷப்படுகிறார். செந்தில் இவர் பின்னாடி தான் பாராட்டுறாரோ என யோசிக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily