Leo Trailer: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பது லியோ படத்திற்குதான். விஜயின் முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். விக்ரம் எனும் மெகா ஹிட்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் லியோ.
அதோடு, கேன்ஸ்டர் படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படமும் லோகேஷின் முந்தைய படங்களை போல ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாகவே உருவாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் என பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிரெண்டிங்காகும் தலைவர்! அடுத்தடுத்த அப்டேட்களை தெறிக்க விடும் லைக்கா – ‘ரஜினி170’ல் இணையும் ஆக்ஷன் ஹீரோயின்
லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் அவரின் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட்லுக் முதல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் தனித்தனி போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள்.
அதேநேரம், விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், விஜயை நேரில் பார்க்க வேண்டுமென்பது அவர்களின் ஆசையாக இருந்தது. எனவே, கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: எங்களையே புலம்பவிட்டாரே.. எக்ஸில் ட்ரெண்ட்டாகும் #WakeUp7ScreenLalith.. என்ன பாஸ் பிரச்னை?
குறிப்பாக லியோ டிரெய்லர் வீடியோவை வெளியிடுங்கள் என ஹேஷ்டேக் மூலம் பதிவிட்டு தொடர்ந்து வேண்டுகோள் வைத்தனர். இதைத்தொடர்ந்து லியோ படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை விஜயே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு, காஷ்மீரில் ஒரு ஓநாயுடன் அவர் சண்டை போடும் போஸ்டரையும் பகிர்ந்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். லியோ இன்னும் 3 நாட்களில் வெளியாவது அவரின் ரசிகர்களுக்கு எல்லையில்லா உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தளபதி 68 படத்தில் இந்த பாப்புலர் ஜோடியுமா? பாட்டுக்கு கூட ஒரு இக்கு வைத்திருக்கும் வெங்கட் பிரபு…
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…