'உன்னை நினைத்து' படத்தில் விஜய்யை வைத்து ஷூட் பண்ண 'ஊட்டிக்கு பூ எதுக்கு' பாடல் வீடியோ!

 
Unnai ninaithu vijay intro song

கோலிவுட்டில் 'தளபதி'-யாக இருந்த விஜய் தான் இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர். இவர் நடித்துள்ள கடைசி படமான 'ஜன நாயகன்' வருகிற ஜூலை 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

நடிகர் விஜய் பல நல்ல படங்களின் கதைகள் கேட்டு, அவருக்கு பிடிக்காததால் நிறைய மிஸ் செய்திருக்கிறார். இப்போது நாம் பார்க்கப்போகும் படம் இதுக்கு அடுத்த லெவல்.

ஆம். கதையும் பிடித்து போய், ஷூட்டிங்கும் போயாச்சு. ஆனால், அதன் பிறகு விஜய் வெளியேறிய படம் தான் 'உன்னை நினைத்து'. இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இதில் முதலில் விஜய் தான் ஒப்பந்தமாகி, ஹீரோவின் இன்ட்ரோ பாடல் மற்றும் லைலாவுடன் டூயட் பாடும் பாடல் என இரண்டு பாடல்களை படமாக்கினார்கள். அதன் பிறகு விஜய் இப்படத்திலிருந்து விலகினார். தற்போது, விஜய்யை வைத்து அப்போது ஷூட் செய்த 'ஊட்டிக்கு பூ எதுக்கு' என்ற இன்ட்ரோ பாடலை விக்ரமன் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

From Around the web