Categories: Cinema News latest news

சூடம் ஏத்தி இறுதி மரியாதை செலுத்தி சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்.!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார். அங்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல புனீத் ராஜுக்குமாருக்கு உண்டு. தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே 46 வயதிலேயே உயிரிழந்துவிட்டார்.

காலையில் உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி வியந்த புனீத் அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய திரையுலகத்தியே ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவரது மறைவிற்கு பலர் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சில நட்சத்திரங்கள் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில்,  கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து நடிகர் விஜய், புனீத் ராஜ்குமார் சமாதிக்கு சென்று சூடம் ஏற்றி தனது அஞ்சலியை செலுத்தினார்.

இதையும் படியுங்களேன் – மாஸ்டர் வசூலால் கரண்ட் பில் கட்ட கூட முடியவில்லை.! வலிமைதான் டாப்.! இதென்ன புதுசா இருக்கு.!

இறக்கும் போதும் இங்கு தான் விஜய் ஷூட்டிங்கில் இருந்தார். அதன் பின்னர் தான் விடுமுறைக்கு வெளியூர் சென்றார். அதன் பின்னர் இங்கு வந்து மாதங்கள் ஆகிவிட்டன. அப்படி இருக்கையில் 4 மாதம் கழித்து அஞ்சலி செலுத்துகிறாரே இவர் என்று பலர் கமெண்ட் அடித்தும்  வருகின்றனர்.

இறந்த மனிதனுக்கு அஞ்சலி செலுத்தினாலும் குற்றம், அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் குற்றம் என்றால் ஒரு மனிதன் என்னதான் செய்வாரா. தெரியவில்லை.

Manikandan
Published by
Manikandan