Connect with us
Prasanth, Vijay

Cinema News

20 முறை விஜயுடன் மோதிய பிரசாந்த் படங்கள்… வெற்றி பெற்றது சாக்லேட் பாயா? தளபதியா?..

90களில் சாக்லேட் பாயாக வந்தவர் பிரசாந்த். இவர் ஒரு காலத்தில் விஜய், அஜீத்த்துக்கெலாம் சீனியர். ஜீன்ஸ் படம் வந்தபோது விஜய், அஜீத்தை விட இவர் ஒருபடி மேல் இருந்தாராம். இப்போது விஜயுடன் மோதிய பிரசாந்த் படங்கள் பற்றிப் பார்ப்போம்.

1993ல் விஜய்க்கு செந்தூரப்பாண்டி, பிரசாந்த்துக்கு கிழக்கே வரும் பாட்டு படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 1994ல் விஜய்க்கு ரசிகன், பிரசாந்த்துக்கு கண்மணி படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். அவரது படம் 175 நாள்கள் ஓடியது.

இதையும் படிங்க… 20 முறை அஜீத்துடன் மோதிய சூர்யா படங்கள்… ஜெயித்தது யாரு? வாங்க பார்க்கலாம்…

1995ல் விஜய்க்கு தேவா, பிரசாந்த்துக்கு ஆணழகன் இதுல பிரசாந்த் தான் வின்னர். 1996ல் விஜய்க்கு பூவே உனக்காக, பிரசாந்த்துக்கு கல்லூரி வாசல் ரிலீஸ். விஜய் தான் வின்னர். இவரது படம் தான் 250 நாள்கள் ஓடியது.

1997ல் விஜய்க்கு காலமெல்லாம் காத்திருப்பேன், பிரசாந்த்துக்கு மன்னவா படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். 1998ல் விஜய்க்கு நினைத்தேன் வந்தாய், பிரசாந்த்துக்கு ஜீன்ஸ் படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர்.

அப்போது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஜீன்ஸ். மலேசியாவிலும் 100 நாள் ஓடிய படமாக ஜீன்ஸ் இருந்தது. அதே ஆண்டில் விஜய்க்கு நிலாவே வா, பிரசாந்த்துக்கு கண்ணெதிரே தோன்றினாள் படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர்.

Jeans

Jeans

1999ல் விஜய்க்கு என்றென்றும் காதல், பிரசாந்த்துக்கு பூ மகள் ஊர்வலம் படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜய் மின்சார கண்ணா, பிரசாந்த் ஜோடி பிரசாந்த் வின்னர். 2000 விஜய் கண்ணுக்குள் நிலவு, பிரசாந்த் குட்லக் விஜய் வின்னர். அதே ஆண்டில் விஜய்க்கு குஷி, பிரசாந்த்துக்கு அப்பு படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.

2001ல் விஜய்க்கு ப்ரண்ட்ஸ், சூர்யாவுக்கு பிரியாத வரம் வேண்டும் இதுல விஜய் தான் வின்னர். அதே ஆண்டில் விஜய்க்கு ஷாஜஹான், பிரசாந்த்துக்கு மஜ்னு படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். 2002ல் விஜய்க்கு தமிழன், பிரசாந்த்துக்கு தமிழ். பிரசாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜய்க்கு வசீகரா, பிரசாந்த்துக்கு விரும்புகிறேன் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.

Thirumalai

Thirumalai

2003ல் விஜய் திருமலை, பிரசாந்த் வின்னர். இதுல விஜய் தான் வின்னர். 2004 விஜய் மதுர, பிரசாந்த் ஷாக். விஜய் தான் வின்னர். 2005ல் விஜய்க்கு திருப்பாச்சி, பிரசாந்த்துக்கு ஆயுதம் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். அதே ஆண்டில் விஜய்க்கு சுக்ரன், பிரசாந்த்துக்கு லண்டன். பிரசாந்த் வின்னர்.

2007ல் விஜய்க்கு போக்கிரி, 200 பிரசாந்த்துக்கு தகப்பன் சாமி, அடைக்கலம் ஆகிய படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2018ல் விஜய்க்கு சர்கார், பிரசாந்த்துக்கு ஜானி படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top