1. Home
  2. Latest News

இவங்க ரெண்டு பேர் படங்களில் நடிக்க ஆசை!.. விஜய்க்கு நடக்காமலே போயிடுச்சே!...

vijay

Actor Vijay: நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் விஜய். துவக்கம் முதலே இவரின் அப்பா எஸ்.ஏ.சி இவருக்கு இளைய தளபதி என்கிற பில்டப்புடன் பட்டத்தை கொடுத்து இவரை சினிமாவில் வளர்த்தார். துவக்கத்தில் அப்பாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் மட்டுமே நடித்த விஜய் ஒரு கட்டத்தில் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் அவரின் கரியரை மாற்றியது.

இந்த படத்திற்கு பின்னாடி விஜயை வைத்து படமெடுக்கலாம் என்று நம்பிக்கை மற்ற இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வந்தது. அதன்பின் தொடர்ந்து பல காதல் கதைகளில் நடித்து நிறைய பெண் ரசிகைகளையும் உருவாக்கினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறினார். அதேபோல் இவரின் படங்கள் அதிக வசூலையும் கொடுத்தது.

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கும் விஜய் போய்விட்டார். அதில் பல சிக்கல்களையும் அவர் சந்தித்து வருகிறார். கரூரில் நடந்த சோக சம்பவம் அவரின் அரசியல் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை விஜய் பல இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதேநேரம் அவர் சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு அது நடக்காமலும் போயிருக்கிறது.

2013ம் வருடம் அவர் அளித்த ஒரு பேட்டியில் ‘பாலா அமீர் இவங்க ரெண்டு பேரோட படமும் செமையா இருக்கு. பார்த்து அசந்து போயிருக்கேன். அவங்க படங்களில் நடிக்கணும்னு ஆசை இருக்கு. சீக்கிரமே நடிப்பேன்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். ஆனால் அவர் பேட்டி கொடுத்து 12 வருடங்களாகியும் அது நடக்கவே இல்லை. விஜய் பொதுவாகவே பெரிய இயக்குனர்கள் படங்களில் அதிகம் நடித்ததே இல்லை. சில படங்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தது. ஷங்கருடன் நண்பன், முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி ஆகிய  இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.