Categories: Cinema News latest news

விஜய்க்கு வந்த பிரம்மாண்ட பிராஜக்ட்… ஷங்கரின் ஆசையை கலைத்த சன் பிக்சர்ஸ்… அடக்கொடுமையே!!

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே போல் ஒரு பக்கம் தெலுங்கில் ராம் சரணை வைத்து “RC 15” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவலை படமாக்குவதற்கான உரிமையை ஷங்கர் வாங்கியுள்ளார் என ஒரு தகவல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்தில் “வேள்பாரி” கதாப்பாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளார் எனவும், இத்திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

Shankar

எனினும் இதனை தொடர்து “வேள்பாரி” திரைப்படத்தை கர்நாடகாவை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதில் கே.ஜி.எஃப் புகழ் யாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த செய்தி வெளிவந்த சில நாட்களிலேயே “வேள்பாரி” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. இவ்வாறு சமீப காலமாக “வேள்பாரி” குறித்து பல சூடான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: “வருங்கால முதல்வர் ராமராஜன்??”… உஷார் ஆன ஜெயலலிதா… புரட்சி தலைவி எடுத்த அதிரடி ஆக்சன்!!

Vijay

அதாவது “வேள்பாரி” திரைப்படத்திற்காக ஷங்கர் முதன்முதலாக நடிகர் விஜய்யைத்தான் அணுகினாராம். விஜய்யும் சரி என்று தலையாட்டி இருக்கிறார். அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் ஷங்கர் அணுகியிருக்கிறார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம், பல கோடி ரூபாய் பட்ஜெட் இதற்கு  ஒதுக்க வேண்டி வரும் என்ற காரணத்தால் இத்திரைப்படத்தை தயாரிக்க முடியாது என கூறிவிட்டதாம். இதனால் விஜய் நடிப்பதாக இருந்த முடிவும் கைவிடப்பட்டதாம்.

Arun Prasad
Published by
Arun Prasad