Categories: Cinema News latest news

எனக்குன்னே வருவீங்களா.?! அஜித்தை சீண்டும் விஜய்.! பின்னணி இதுதானா.?!

தமிழ் சினிமாவில் எப்போதும் இரு பெரும் நட்சத்திரங்களை சுற்றியே வியாபாரம் ஆகும். எம்.ஜி.ஆர் – சிவாஜி, கமல் – ரஜினி , விஜய் – அஜித் , சிம்பு – தனுஷ் , சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி வரை இரு நட்சத்திரங்களை போட்டியாளர்களாக மாற்றி அதன் மூலம் படத்திற்கான ப்ரோமோஷன், வியாபாரம் என நடைபெறும். அந்த நடிகர்களும் இந்த போட்டி ஆரோக்கியமான போட்டி என வேணும், வேண்டாம் என எதுவும் சொல்லாமல், அதற்கு தகுந்தாற் போல நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

தற்போது சமகாலத்தில், விஜய் – அஜித் தான் பெரும் நட்சத்திரங்களாக உள்ளனர். அதில், விஜய் படம் வெளியானால், அஜித் பற்றிய செய்தி எப்படி ஆகினும் ஒன்று வெளியாகிவிடும். அதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவிடுவர். அதே போல, அஜித் படம் வெளியாகிறது என்றால் அந்த சமயம் விஜய் தரப்பில் ஏதேனும் நடந்துவிடும்.

இதையும் படியுங்களேன் –  இது முதல் தடவை இல்லை.! ஏற்கனவே ஒன்னு முடிஞ்சிருச்சு.! பகீர் கிளப்பிய ரஜினி தரப்பு.!

 

அப்படிதான், அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான மறுநாளே, விஜய் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களுக்கு நேரில் சென்று அவரது நினைவிடத்தில் விஜய் தனது அஞ்சலியை செலுத்தினார். வலிமை வசூல், வலிமை விமர்சனம் என ட்ரெண்ட் ஆகி கொண்டிருந்த வேளையில், திடீரெனெ விஜயின் இந்த விசிட் ட்ரெண்ட் ஆனது.

இது போல சில நேரங்களில் விஜய்க்கும் நடந்துள்ளது. விஜயின் அப்டேட் வரும் நிலையில் அஜித் பைக்கில் ஊர் சுற்றும் நிகழ்வு, அஜித் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்ட நிகழ்வு என ஏதேனும் ட்ரெண்ட் ஆகிவிடும். அதுபோலதான் தற்போதும் வலிமை ரிலீஸ் சமயத்தில் விஜயின் விசிட்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Manikandan
Published by
Manikandan