×

செம ஸ்டைல்.. செம பஞ்ச்... மாஸ்டர் விழாவில் தெறிக்க விட்ட விஜய்... 
 

விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய்யின் பேச்சை விட அவரது உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 

வழக்ககமாக பேண்ட் ஷர்ட் அணிந்து வரும் விஜய் இந்த நிகழ்வுக்கு கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்து அசத்தியிருந்தார்.

மேடையில் விஜய் பேசிய சில முக்கிய பஞ்ச வசனங்கள் இதோ!

மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக்கூடாது.

நண்பர் அஜித் மாதிரி கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன்

வாழ்க்கை நதி மாதிரி நம்மை சிலர் வணங்குவார்கள், சிலர் வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். நம் கடமையை செய்து கொண்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம்மை பிடிக்காதவங்க நம் மீது கல் எறிவார்கள்.. சிரிப்பால் அவர்களை கொல்ல வேண்டும்.. நம் வெற்றியால் அவர்களை கொலை செய்ய வேண்டும்.

இளைய தளபதியாக இருக்கும் போது ரெய்டு இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது.எனவே, ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன்..

உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாகவும் இருக்கனும்.

From around the web

Trending Videos

Tamilnadu News