×

திடீரென மேனஜரை வேலை விட்டு தூக்கிய விஜய்...? நடந்தது என்ன..?

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் படத்தில் வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு முன்னதாகவே விஜய் தனது அடுத்த படமான தளபதி 65 படத்தின் வேளைகளில் இறங்கிவிட்டார்.

 

பொதுவாக விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதவாது பிரச்னை ஏற்பட்டு சர்ச்சையாக பேசப்படும். பெரிய நடிகர்கள் என்றாலே அவரையும், அவரது சொந்த விஷயங்களிலும் பலரும் மூக்கை நுழைத்து சின்ன துரும்பு கிடைத்தால் கூட அதனை ஊதிவிட்டு பெருசாக்கிவிடுவார்கள்.

அந்தவகையில் தற்போது விஜய்யின் மேனேஜரும் மாஸ்டர் படத்தின் லைன் ப்ரொட்யூசருமான ஜகதீஷுக்கும் விஜய்க்கும் இடையியே மனக்கசப்பு இருந்து வந்ததாகவும், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விஜய் அவரை உடனடியாக வேளையில் இருந்து தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல இணையதள சேனல் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்துள்ளது. அப்போது தான், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை இது முற்றிலும் பொய்யான தகவல் என்பதை உறுதி செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News