முதலமைச்சர் விஜய் மட்டுமில்லை!.. சங்கீதா விஜய்யும் அனிருத் ரிசப்ஷனுக்கு வந்துருக்காங்க!..

 
ani

தமிழக முதல்வர் விஜய் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறன் திருமணத்தில் தனியாக  பங்கேற்ற நிலையில், தற்போது அவரது மனைவி சங்கீதா கலந்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று கிண்டியில் நடைபெற்ற அனிருத் திருமண வரவேற்பில் நீல நிற பந்த்கலா சூட் அணிந்து தனியாக வந்த விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தேமுதிக பொருளாளரான  எல்.கே. சுதீஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 

இதற்கிடையே விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அனிருத் திருமண வரவேற்புக்கு வந்த புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா நிகழ்ச்சிக்கு வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

CR  Desk
CR Desk

7943 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web