Categories: Cinema News latest news

முதல்ல விஜய் திருந்தட்டும்!.. லியோ படம் ஜெயிலர் வசூலை முந்தாது!.. மீண்டும் உரசும் மீசை ராஜேந்திரன்!..

ரஜினிகாந்த் உடன் நடிகர் விஜய்யை ரசிகர்கள் கம்பேர் செய்வது ரொம்பவே தப்பு என்பது தான் என்னுடைய கருத்து. மத்தபடி எனக்கும் விஜய்க்கும் எந்தவொரு பகையும் முன் விரோதமும் இல்லை என மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடித்தால் என் பாதி மீசையை எடுத்துடுறேன் என மீசை ராஜேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதையும் படிங்க: எல்சியூவுக்கு நோ சொன்ன விஜய்!.. ஹாலிவுட் படத்தை அப்படியே உருவிய லோகேஷ் கனகராஜ்!.. அதே தான்..

இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் ஆபாச வசனம் பேசுவது, சிகரெட், சரக்கு அடிக்கும் காட்சிகளை நிறுத்தி விட்டு முதலில் திருந்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் இந்த வயதிலும் தனது உச்சத்தை தாண்டிக் கொண்டே இருக்கிறார். ஜெயிலர் படம் வெளியாகும் போது போட்டியாக எந்தவொரு பெரிய படங்களும் வெளியாகாத நிலையில், 600 கோடி வசூலை அந்த படம் ஈட்டியது. ஆனால், விஜய்யின் லியோ படத்துக்கு பல மாநிலங்களிலும் பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், லியோ வசூல் அந்தளவுக்கு வராது என்பதை இப்போவும் தில்லாகவே சொல்கிறேன் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்காக சிலுக்கு செஞ்ச அந்த விஷயம்!.. மனுசன் எப்பவுமே அத மறக்கவே மாட்டாராம்!.

என் மகன் டாக்டராக இருக்கிறார். அவரே விஜய் ரசிகர் தான், நான் இப்படியெல்லாம் பேசி வருவதை பார்த்து விட்டு அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்க என சொல்கிறார். விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்தை அவமரியாதையாக பேசாமல், அவரை மதித்தால் நிச்சயம் நானும் விஜய் சாரை பற்றியும் அவரது படங்கள் குறித்தும் பேசமாட்டேன்.

ஆனால், ரஜினி சார் எவ்ளோ பெரிய லெஜண்ட் அவரை போல விஜய் வருவது சந்தோஷமான விஷயம் தான். ஆனால், அவரை காலி பண்ணிட்டாரு, பின்னாடி அனுப்பிட்டாருன்னு பேசுவது சரியானதல்ல என மீசை ராஜேந்திரன் பொங்கி உள்ளார்.

Saranya M
Published by
Saranya M