Categories: Cinema News latest news

ஓட்டு போட்டுவிட்டு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்ட விஜய்….எதற்கு தெரியுமா?…..

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் சிகப்பு கலர் காரில் வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டுப் போட்டார்.

இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப்போட சைக்கிளில் வந்து எல்லோரும் கட்டாயம் அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இவரின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த தேர்தலில் இவரது ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். இவரது படத்திலும் கூட அவ்வப்போது அரசியலை மையமாகக் கொண்ட வசனங்கள் இடம் பெறும். கூடிய சீக்கிரத்தில் இவரையும் களத்தில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓட்டுப் போடும் இடத்திற்கு இவரின் வருகையை அறிந்து மக்கள் கூட்டம் அலை மோதியதால் கூட்ட நெரிசலுக்கு வருந்துகிறேன் என்று கைகூப்பிய படி நடந்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது. அவர் வணக்கம் கூட சொல்லிருக்கலாம்..

அந்த வீடியோ இதோ: https://twitter.com/MADHESVJ1/status/1494877916941156363?s=20&t=uoc497AfqC8AxZT6Fw_SmQ

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini