×

7.5 சதவீத உள் ஒதுக்கீடு : மருத்துவ படிப்பிற்கான தர வரிசையை வெளியிட்ட தமிழக அரசு

 

மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ஒதுக்கிய தர வரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

இந்திய அளவில் முதலீடுகளை ஈர்ப்பது, நீர் மேலாண்மையில் சாதனை படைத்து சாதனை பெற்றுள்ளது, காலாரா நோயை இல்லாமல் செய்தது, விவசாயிகளை பாதுகாப்பது என தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதேபோல், மருத்து படிப்பிற்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை அறிவித்து அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கிட்டை உள்ளடக்கி இந்த வருடத்திற்கான தர வரிசை பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4061 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இதுவரை 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருப்பதாகவும், இந்த இட ஒதுக்கிட்டால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News