
Cinema News
இந்திய அளவில் நடந்த நாய் கண்காட்சி.. பட்டத்தை தட்டி தூக்கிய கேப்டன் வீட்டின் செல்லப் பிராணி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தனது கடின உழைப்பால் சினிமாவில் உச்சம் உச்சம் தொட்டார். கேப்டனின் குணமே தேடி சென்று மற்றவர்கள் உதவுவார் உதவி என்று தேடி வந்தவர்களுக்கும் உதவி செய்வார். அதிலும் சாப்பாடு கேப்டனை மாதிரி யாரும் போட முடியாது. அவரது சூட்டிங்கில் வாழை இலை விரித்து கறி விருந்து நடக்கும்.
தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி வாழக்கூடிய மனிதர். அரசியலில் அடுத்த எம்ஜிஆர் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தமிழக மக்களுக்கு கொடுத்து வைக்காமல் போனது. மக்களுக்காகவே வாழ்ந்து தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் பெரிதளவில் எதுவும் செய்யாமல் சென்றார். அதிலும் குறிப்பாக விஜயகாந்தின் வீடு மிக மிகப் பழமையான ஒன்று.

மற்ற நடிகர்கள் பங்களாவில் இருக்கும் பொழுது விஜயகாந்த் எண்பதுகளில் வாங்கிய வீட்டில் தான் இன்னும் அவரது குடும்பம் வாசித்து வருகிறார்கள். விஜயகாந்த் ஒரு அரசியல் மேடையில்,” நான் அரசியலுக்கு வந்தால் என்னை துன்புறுத்துவார்கள் என்னை மிரட்டுவார்கள். எனக்கு வேற மாதிரி இருந்தா கூட பரவாயில்லை ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் அவங்க எதையோ செஞ்சு பொழைச்சு பாங்க”. என்று சொல்லி இருப்பார்.
விஜயகாந்திற்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். அதனாலேயே என்னவோ அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். கேப்டன் பிரபாகரன் படம் வெளியான போது இவர் பிறந்ததால் இவருக்கும் பிரபாகரன் என்றே விஜயகாந்த் பெயர் வைத்து விட்டார். விஜய பிரபாகரன் தற்போது தேமுதிக கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கின்றார்.
அரசியலைத் தாண்டி விஜய பிரபாகரனுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். வெளிநாடுகளில் இருந்து நாய்களை இறக்குமதி செய்து அதை வளர்ப்பது. என்று தன்னுடைய பொழுதுபோக்கை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய பிரபாகரன் வளர்த்த நாய் ஒன்று கொடைக்கானலில் நடைபெற்ற அகில இந்திய நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றது. இந்தியா முழுவதிலும் வந்திருந்த நாய்களின் முன்னாள் தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் மகன் பிரபாகரனின் வளர்ப்பு நாய் முதல் பரிசை தட்டிச் சென்றது.