Categories: Cinema News latest news

மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜயகாந்த்!.. அச்சச்சோ இப்போ இப்படியொரு பாதிப்பா?

சமீபத்தில் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார் கேப்டன் விஜயகாந்த். இந்நிலையில், மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகராக இருந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் கருப்பு எம்ஜிஆர் என பெரும் செல்வாக்கைப் பெற்ற விஜயகாந்த். அதே செல்வாக்கை பயன்படுத்தி பல இடங்களில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தேமுதிக கட்சியை தொடங்கினார்.

இதையும் படிங்க: அக்கா தம்பின்னு சொல்லிட்டு இப்படி அசிங்கம் பண்றீங்களே!.. பிக் பாஸ் போட்டியாளரை விளாசிய பிரபல நடிகை!

சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக வந்து சட்டசபையில் கெத்தாக அமரும் அளவுக்கு வளர்ந்து வந்த நிலையில், அவரது வளர்ச்சிக்கு அவரது உடல்நிலையே பெரிய தடையாக மாறிவிட்டது.

அப்படியே சக்கர நாற்காலியில் முடங்கிப் போய் கிடக்கும் விஜயகாந்த் கடந்த மாதம் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பற்றி மோசமான வதந்திகள் எல்லாம் உலாவின. ஆனால், அதில் எல்லாம் மீண்டு மீண்டும் வீடு திரும்பினார். கட்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்று கட்சி பொறுப்புகளில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து மனைவி பிரேமலதாவை தேமுதிக தலைவராக மாற்றினார்.

இதையும் படிங்க: முக்காடு லதா!.. ரஜினிகாந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் ரசிகர்கள்.. வெயிட்டா மாட்டிக்கிச்சு!..

வீட்டில் ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் திடுக்கிடும் தகவலை தற்போது தேமுதிக அறிவித்துள்ளது.

மேலும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதன் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் விஜயகாந்த் என்றும் அறிவித்துள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் போகாமலே இருப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்,

Saranya M
Published by
Saranya M