Categories: Cinema News latest news throwback stories

சத்யராஜ் யார் தெரியுமா?… விஜயகாந்த், சத்யராஜ் ரெண்டு பேருக்கும் கமல் கொடுத்த ஷாக்…

சத்யராஜ் விஜயகாந்த் இருவருமே தமிழ் சினிமாவில் சமகாலத்தில் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

சத்யராஜ் சினிமாவில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் விஜயகாந்தும் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் சத்யராஜ் விஜயகாந்த் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அதற்குப் பிறகு நீண்ட காலமாக அவர்கள் இருவரும் நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள்.

sathyaraj

எனவே அதிகபட்சம் சத்யராஜ் செல்லும் அனைத்து விழாக்களுக்கும் விஜயகாந்தையும் அவர் அழைத்துச் செல்வது உண்டு. ஒருமுறை இப்படி விஜயகாந்தை ஒரு விழாவிற்கு சத்யராஜ் அழைத்து சென்றிருந்தார் அந்த விழாவில் நடிகர் கமலஹாசனும் கலந்து கொண்டிருந்தார்.

கமல்ஹாசனின் பேச்சு:

பொதுவாகவே சத்யராஜ் பெரியார் மற்றும் பகுத்தறிவு கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட நடிகர் கமலஹாசனும் கூட அதே மாதிரியான ஒரு மனநிலையை கொண்டவர். எனவே அவர் பேட்டியில் பேசும் பொழுது சத்யராஜை உங்களுக்கு ஒரு பகுத்தறிவுவாதியாகதான் தெரியும் ஆனால் என்னை பொறுத்தவரை அவர் ஒரு சித்தர் என கூறினார்.

இதைக் கேட்டதும் விஜயகாந்த்திற்கும் சத்யராஜிற்கும் அதிர்ச்சி ஆகிவிட்டது என்ன திடீரென உங்களை சித்தர் என கூறுகிறார் என என அதிர்ச்சியாக கேட்டுள்ளார் விஜயகாந்த். அதைக் கேட்டு அப்பொழுது சத்யராஜும் கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருந்தார். 

பிறகு சற்று சமாளித்துக்கொண்ட சத்யராஜ், அவர் ஏதோ அவருக்கு தோன்றியதை சொல்கிறார் விடுங்க விஜயகாந்த் என விஜயகாந்தை சமாதானப்படுத்தியுள்ளார். இதை சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சினிமா நிகழ்ச்சிகளிலும் சரி, அரசியல் மேடைகளிலும் சரி சில சமயங்களில் கமல்ஹாசன் என்ன பேசுகிறார் என்பதை அறிவது கொஞ்சம் கடினமாகதான் இருக்கிறது.

Rajkumar
Published by
Rajkumar