Categories: Cinema News latest news

திருமண நாளை குடும்பத்தோடு கொண்டாடிய கேப்டன்!.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து மக்களின் அபிமான நட்சத்திரமாக திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக்கரமான வசனங்களோடு மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். அதனாலேயே புரட்சிக்கலைஞர் என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் ரஜினி, கமல் என இரு தூண்கள் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த போது கருப்பு வைரமாக மின்னியவர் விஜயகாந்த். அசைக்க முடியாத அவர்கள் கோட்டையை தான் வந்த குறுகிய காலத்திலேயே சாய்த்துக் காட்டியவர் கேப்டன். அந்தக் காலத்தில் எப்படி மூவேந்தர்களாக சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி இருந்தார்களோ அதே போல் 80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என மூவேந்தர்களாக கோலோச்சியிருந்தனர்.

vijayakanth

1984 ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். இவர் நேரிடையாக இதுவரை
ஒரு தெலுங்கு படங்களில் கூட நடித்ததில்லை. மேலும் சில படங்களை தாமே இயக்கி நடிக்கவும் செய்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் அதிரடி திரைப்படங்களாகவே அமைந்தன.

இவருடைய ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் தூள் பறக்கும். பேக் ஷார்ட்டில் அடிக்கும் ஒரே நடிகர் விஜயகாந்த் தான். அதற்கென்ற பல ரசிகர்கள் இவரது திரைப்படங்களை பார்க்க வருவார்கள். இவருக்கும் இரு மகன்கள். மூத்த மகனான சண்முக பாண்டியன் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். மனைவி பிரேமலதா, கட்சியில் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

vijayakanth

இந்த நிலையில் விஜயகாந்த் தன்னுடைய 33 வது திருமண நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது திருமணத்திற்கு கலைஞர் கருணாநிதி வந்திருந்து ஆசிர்வாதம் செய்தார். மேலும் திருமண நாளான இன்று விஜயகாந்தை சந்திப்பதற்காக இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சி அவரது வீட்டிற்கு வந்து கேப்டனை சந்தித்து விட்டு சென்றார்.

விஜயகாந்த் அவருடை திருமண நாளை இன்று அவரது குடும்பத்தாரோடு கொண்டாடி மகிழ்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்கள் இன்று இணையத்தி வைரலாகின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini