Categories: Cinema News latest news

எனக்கு வாழ்க்கை கொடுத்ததே கேப்டன்! எத சொல்றாரு? சரத்குமாருக்காக விஜயகாந்த செய்த மாஸ் சம்பவம்

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். 170படங்களுக்கும் மேல் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர். ஆக்‌ஷன் கிங் என்ற அடைமொழிக்கு உண்மையிலேயே சொந்தக்காரராக விளங்கியவர். நடித்த அத்தனை படங்களிலும் விஜயகாந்தின் சண்டை காட்சிகளுக்கு என்று ஒரு தனிப் பெருமையே உண்டு.

sarath1

மேலும் பிரபலங்கள் பலருக்கும் தக்க சமயங்களில் பெரும் உதவிகளை செய்திருக்கிறார். இவரால் பலனடைந்தவர்கள் ஏராளம்.இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி ஒரு மேடையில் நடிகர் சரத்குமார் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது பொதுவாக ஒரு நடிகர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவரை அடுத்து மற்றொரு நடிகர் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் அவரின் வளர்ச்சிக்கு வளர்ந்த நடிகர் தடையாக இருப்பார். ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை. தனக்கு அடுத்து வரும் நடிகர்களும் நல்ல நிலைமையை அடைய வேண்டும் என நினைக்கக் கூடியவர்.

sarath2

அந்த வகையில் சரத்குமார் வளர்ச்சிக்கும் விஜயகாந்த் முக்கிய காரணமாக இருந்தாராம். ஒரு இயக்குனர் விஜயகாந்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.ஆனால் அந்த கதையை கேட்ட விஜயகாந்த் உடனே சரத்குமாருக்கு போன் செய்து ‘சரத் உனக்கு ஏத்த மாதிரி ஒரு கதை இருக்கு, அது நீ பண்ணாதான் நன்றாக இருக்கும்’ என கூப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

இதை குறிப்பிட்டு பேசிய சரத்குமார் எனக்கு வாழ்க்கையை கொடுத்ததே விஜயகாந்த் என்றும் அந்த நன்றியை எப்பவும் மறக்க மாட்டேன் என்றும் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini