×

சினேகாவை காப்பாற்றிய விஜயகாந்த்....அது மட்டும் நடக்கவில்லை என்றால்?...

சினேகா நடித்த ஒரு திரைப்படம் வெளியாக சிக்கல் ஏற்பட்ட போது விஜயகாந்த் உதவிய சம்பவம் பற்றி தெரிந்துகொள்வோம். 
 
vijyakanth
ஹைலைட்ஸ்:
விஜயகாந்த் மட்டும் இந்த உதவியை செய்யாமல் போயிருந்தால் சினேகா ரசிகர்களிடம் அறிமுகமாக  மேலும் 2 வருடங்கள் ஆகியிருக்கும்.

சுசி கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ திரைப்படத்தில்தான் நடிகை சினேகா முதன் முறையாக அறிமுகமானார். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. அதற்குள் மாதவன் நடித்த ‘என்னவளே’ என்கிற படத்திலும் சினேகா நடித்து முடித்தார். அப்படம் வெளியாக தயாராக இருந்தது. 

sneha

ஆனால், சினேகா அறிமுகமானது என் படத்தில்தான். எனவே, என் படம் தான் முதலில் வெளியாக வேண்டும் என ‘விரும்புகிறேன்’ தயாரிப்பாளர் பிரான்சிஸ் கறார் காட்டினார். இதனால் என்ன செய்வது என ‘என்னவளே’ படக்குழு தவித்து வந்தது. சினேகாவுக்கும் இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனவே,  அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த விஜயகாந்த் என்னவளே படக்குழு அணுகி உதவி கேட்டது.

vijayakanth

உடனடியாக விரும்புகிறேன் தயாரிப்பாளரை அழைத்த விஜயகாந்த் ‘உங்கள் படத்தை எப்போது வெளியிடுகிறீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு வரும் தீபாவளிக்கு வெளியிடுகிறேன் என அவர் கூற, அப்படி வெளியிடவில்லை எனில் ‘என்னவளே’ படம் வெளியாகும் என விஜயகாந்த் கூற அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் கூறியபடி விரும்புகிறேன் படம் தீபாவளியன்று வெளியாகவில்லை. எனவே, ‘என்னவளே’ படம் வெளியானது. விஜயகாந்த் கூறிவிட்டதால் பிரான்ஸிசால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பின் 2 வருடங்கள் கழித்தே ‘விரும்புகிறேன்’ வெளியானது.

sneha

விஜயகாந்த் மட்டும் இந்த உதவியை செய்யாமல் போயிருந்தால் சினேகா ரசிகர்களிடம் அறிமுகமாக  மேலும் 2 வருடங்கள் ஆகியிருக்கும். அந்த 2 வருடங்கள் அவர் வேறு படங்களிலும் நடித்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துரையில் பிரச்சனைகள் வந்த போது ஒத்த ஆளாக விஜயகாந்த பலருக்கும் உதவியுள்ளார். அதில் இதுவும் ஒன்று.

From around the web

Trending Videos

Tamilnadu News