×

விஜயகாந்திற்கு என்ன ஆச்சு? உடனடி அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கியவர் விஜயகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து இவர் தே.மு.தி.க என்ற கட்சியை ஆரம்பித்து, அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். மேலும் இவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறார். 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில், அவரது உடல்நிலை குறித்து தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் கூறியதாவது, ''திரு.விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட்-19 சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கதிரியக்க மதிப்பீடு செய்ததில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தகவல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News