Vijayakanth: நான் தாங்குவேன்.. ரஜினியால முடியாது! கேப்டன் செய்த செயல்
பிரபல சினிமா தயாரிப்பாளர் காஜா மொய்தீன் சிங்கப்பூர் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழா பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த நட்சத்திர கலை விழாவை நடத்தியதில் ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்திற்கும் சன் டிவிக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதையும் தெரிவித்திருக்கிறார். இவருடைய ஏற்பாடில் தான் நட்சத்திர கலை விழாவே நடைபெற்றது.
நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது இந்த மாதிரி ஒரு கலை விழாவை நடத்த விஜயகாந்த் திட்டமிட்டார். இதன் மூலம்தான் பெரும்பாலான கடனை அடைத்தார்கள். அந்த நேரத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு என தனி விமானம் ஏற்பாடு செய்து அவர்களை பாதுகாப்புடனும் பத்திரமாகவும் அழைத்து கொண்டு சென்றதில் கேப்டனுக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த நிகழ்ச்சியை மிக கவனமாக கையாண்டதில் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனர் காஜா மொய்தீனுக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது. இதைப் பற்றி ஒரு பேட்டியில் காஜா மொய்தீன் கூறும் பொழுது மலேசியாவில் வந்து இறங்கியதும் ரஜினியை பார்க்க அங்குள்ள தமிழர்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு வந்துவிட்டனர். இந்த கூட்டத்தில் இருந்து ரஜினியை எப்படி பாதுகாப்பாக கொண்டு செல்ல போகிறோம் என்ற ஒரு பதற்றம் அனைவருக்குமே இருந்தது.
அதே நேரம் மலேசியா தமிழர்களுக்கு பிடித்த மற்றொரு நடிகராகவும் விஜயகாந்த் இருந்தார். அவரைப் பார்க்கவும் விமான நிலையத்தில் ஏராளமான பேர் கூடியிருந்தனர். ஆனால் விஜயகாந்த உட்பட அனைவருக்கும் ரஜினியை எப்படியாவது பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்து இருந்தனர். அப்போது ரஜினியை சுற்றி விஜயகாந்தை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி யாரும் ரஜினியை அண்டாதவாறு அங்கு இருந்த ரசிகர்களை விலக்கிவிட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றிருக்கிறார் விஜயகாந்த்.
அப்போது காஜா மொய்தின் விஜயகாந்திடம் சார் உங்களுக்கும் சேர்ந்துதான் அந்த கூட்டம் வந்திருக்கிறது. நீங்களும் முக்கியம்தான் என்று சொல்ல அதற்கு விஜயகாந்த் நான் தாங்கி விடுவேன். ஆனால் ரஜினியால்.. என சொல்லிவிட்டு ரஜினிகாந்தை மிக பத்திரமாக அழைத்துச் சென்றாராம் விஜயகாந்த். அதுமட்டுமல்ல சரத்குமாருக்கும் அதில் முக்கிய பங்கு இருக்கிறது என்றும் காஜாமொய்தீன் பேசியுள்ளார்.
